ராமநாதபுரம்
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேசத் துரோகியென விமர்சித்த எச்.ராஜாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர் படத்தை காலில் மிதித்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேசத்துரோகி என விமர்சித்த பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜாவை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜோதிபாலன், சரவண காந்தி, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ராமலட்சுமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

This post was created with our nice and easy submission form. Create your post!