சேலம்
சேலம் மாவட்டத்தில் தெய்வீக திருமண மண்டபத்தில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் நடத்திய திருமணிமுத்தாறு திருவிழாவில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
ஹோமம் பூஜைகளுடன் தொடங்கி இறை வணக்கம், வரவேற்பு நடனம், இசை கச்சேரி, ஆன்மீக சொற்பொழிவு ,பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு நடைபெற்றன.
இறுதியில் ஆன்மீக சேவை பணியாற்றிய வர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்ந மாநாட்டிற்கு கோவை பேரூர் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ சாந்தலிங்க மருதாசல அடிகளார், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் வாழும் கலியுக சித்தர் சுவாமி ராமானந்தா , சீர்வலர்சீர். தண்டபாணி தேசிகபண்டார சந்நிதி சொற்கபுர ஆதீனம், ஸ்ரீ வள்ளிமலை ஆதீனம், சுவாமி ஆத்மானந்தா ஜி, சுவாமி வேதாந்தானந்தா ஜி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஸ்ரீ லலிதா மஹிலா ஸமாஜம் யோகிநீ சிவப்பிரியாம்பா ஸரஸ்வதி, பாலாம்பா மாதாஜி, சென்னை ஸ்ரீ அன்னை ஞானேஸ்வரிகிரி மாதாஜி, மதுரை ஸ்ரீ வித்யாம்மா ஸரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கிராமியம். நாராயணன், மரபுவழி குணபரிவாளர். கோமீ. உயிரினியனார், ஜோதிட பிரம்மஸ்ரீ முனைவர். சிவசூரியன் , கோவை முனைவர். வள்ளியம்மாள், கவிஞர். கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

மாநாட்டின் இறுதியில் திருக்கோயில்களில் வசூலிக்கப்படும் தரிசன கட்டணம் பக்தர்களுக்கிடையே பாகுபாடு & வேற்றுமையை உருவாக்குவதால் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பல ஆயிரம் நூற்றாண்டு பழமை வாய்ந்த திருக்கோயில்கள் சிதிலமடைந்து பூஜைகள் நடைபெறாமல் உள்ளது. உடனே அவற்றை புதுபித்து பூஜைகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் நமது பாரம்பரிய உடைகள் மட்டுமே அணிந்து வருதல் கட்டாயமாக்க வேண்டும்.திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளின் நலன் கருதி மாத ஊதியம் வழங்கிட வேண்டும். அனைத்து திருக்கோயில்களிலும் தரமான அடிப்படை வசதிகளை செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
திருக்கோயில்களின் வருமானத்தை திருக்கோயில்கள் நலன் சார்ந்த மேம்பாட்டு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும். திருக்கோயில்களுக்கும் மற்றும் ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துக்களை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ள மாற்று மதத்தினர் மற்றும் தனிநபர்களை உடனே வெளியேற்றி அந்த சொத்துக்களை மீட்டெடுக்க வேண்டும்.
நமது இந்து சமயத்தை சார்ந்த சந்நியாசிகளுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று வர இலவச ரயில்வே பாஸ் வழங்கிட வேண்டும். இந்துக்கள் மற்றும் இந்து திருக்கோயில்களின் நலனுக்காக ஒரு தனி வாரியத்தை அமைத்திட வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்து சமயத்தை போற்றும் விதமாக திருக்கோயில்கள் அருங்காட்சியகங்களை அமைத்திட வேண்டும். திருக்கோயில்களின் திருவிழா காலங்களில் நமது பாரம்பரிய இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை கட்டாயம் நடத்திட வேண்டும்.
திருக்கோயில்கள் சார்ந்துள்ள குளம் மற்றும் நதிகளின் புனிதத்தை பாதுகாத்திட அனைத்துவித நடவடிக்கைகளையும் உடனே எடுத்திட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்த மாநாட்டில் பொதுமக்கள் மற்றும் சங்கத்தின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாநாடு ஏற்பாடுகளை சங்கத்தின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி அவர்களின் தலைமையில் முனைவர்.சுபத்ரா செல்லதுரை, ராம்கமல் ,மோகன்குமார், வேலுசாமி, ரமேஷ், ஜெயா, மாணிக்கவேல், பாலசுப்ரமணி, கார்த்திக், விஷ்ணு ஆகியோர் செய்திருந்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings