*முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி 101 வது பிறந்தநாள் இன்று உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர் மற்றும் இன்று தமிழ் நாட்டில் உள்ள கழக தொண்டர்கள் கொண்டாடி வரும் சூழலில் நீலகிரி மாவட்டம் அருவங்காடு பகுதி மற்றும் இளித்தொரை பகுதியில் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகி காளிதாஸ் மற்றும் கழக உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி அவர்களின் படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர் கலைஞர் மு.கருணாநிதி.
அரசியல், இலக்கியம் திரைப்படம், நாடகம் எனப் பல்வேறு துறைகளில் அழியாத் தடம் பதித்து தமிழ் மொழி, மாநில முன்னேற்றத்துக்குப் பெரும் பங்காற்றியவர்.
கலைஞர், தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர் என்று அன்புடன் அழைக்கப்படுபவர்.
1924 ஜூன் 3 – திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் பிறந்தார்.
திராவிட அரசியலில் மைல்கல்லாக இருந்த முத்துவேல் கருணாநிதி, 50 ஆண்டுகள் மக்களுக்காக உழைத்தார், தன்னுடைய 14 வயதில் போராட்ட களம் கண்டவர்.
கலைஞர் சிந்தனையின் ஊற்றில் இருந்து எழுதப்பட்ட சுமார் 150ற்கும் மேற்பட்ட நூல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
சமூகம் சார்ந்த 10 நாவல்கள், 6 சரித்திர நாவல்களும் அதில் உண்டு.
1947ஆம் ஆண்டு ராஜகுமாரி என்ற படத்திற்கு முதன்முறையாக பணியாற்றினார் கலைஞர் கருணாநிதி.
இவருடைய வசனத்தில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பொன்னர் சங்கர் (2011).
தனது வாழ்நாளில் 21 நாடகங்கள், 69 திரைப்படங்களில் தன் உழைப்பை கொடுத்துள்ளார் கலைஞர்.
எம்.ஜி. ஆருடன் சுமார் 9 படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
1957ஆம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் குளித்தலை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நின்று அதில் வெற்றியும் பெற்றார்; அப்போது அவரின் வயது 33.
தமிழ்நாட்டில் 12 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்; இந்திய அரசியல்வாதிகளில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக இது கருதப்படுகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings