சென்னை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த் (29). மாட்டு தீவன விற்பனை நிலையம் வைத்து உள்ளார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு செல்போன் ஆப் மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா (30) என்கிற பெண் அறிமுகமானார். இருவரும் செல்போன் செயலி மூலம் தொடர்ந்து பேசிவந்தனர். பின்னர் இருவரும் தங்கள் செல்போன் எண்களை மாற்றி பேச தொடங்கினர். காதலர்களாக மாறிய இருவரும் அடிக்கடி இருவரும் சந்திக்க தொடங்கினர். இந்த வேளையில் சத்யாவின் உறவினர் என தமிழ்ச்செல்வி என்பவரும் மகேஷ் அரவிந்துக்கு அறிமுகமானார். இருவரும் பல்வேறு காரணங்களை கூறி மகேஷ் அரவிந்திடம் பணம் வாங்கி உள்ளனர்.
இதற்கிடையே கடந்த மாதம் 21ம் தேதி தொப்பம்பட்டியில் மகேஷ் அரவிந்த் – சத்யா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை தமிழ்ச்செல்வி தான் நடத்தி வைத்துள்ளார். மகேஷ் அரவிந்த் உறவினர்கள் தாலி உள்பட 12 பவுன் நகையை சத்யாவிடம் வழங்கினர். இதையடுத்து சத்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. அவர் செல்போனை பரிசோதித்தபோது அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. அதோடு அவர் பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை செல்போனில் வைத்திருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ் அரவிந்த் அவரை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதற்கிடையே சத்யா மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் அரவிந்த் இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‛‛சத்யா தன்னை திருமணம் செய்து ரூ.50 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகைகளை மோசடி செய்ததாகவும், பலரை இதுபோல் ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், மொத்தம் 15 பேரை திருமணம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை தீவிரமாக தேடிவந்தனர். மேலும் அவரது செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து போலீசார் கண்காணித்தனர். அப்போது சத்யா புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் சத்யாவை கைது செய்துள்ளனர்.
சத்யா 15 பேரை திருமணம் செய்துள்ளதாகவும், மேலும் 30க்கும் மேற்பட்டவர்களிடம் காதலிப்பது போல் பேசி பணமோசடி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் தான் அதுபற்றிய கேள்விக்கு போலீசார் மேற்கூறியவாறு பதிலளித்துள்ளனர்.
60 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என கோரி சத்யா ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் சந்தியாவை ஜாமீனில் விடுவிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings