in

CryCry

ஆம்ஸ்ட்ராங் உடலை ஆம்புலன்சில் இருந்து இறக்கி மீண்டும் போராட்டம்

சென்னை

சென்னையை அடு்த்த பெரம்பூர் செம்பியம் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான இவர் பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டனர்.

 இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவே கொண்டுசெல்லப்பட்டது.

இன்று ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. உடற்கூராய்வு முடிந்தும் ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், உளவுத்துறை ஏடிஜபியை மாற்ற வேண்டும், ஆம்ஸ்ட்ராங் உடலை பொது இடத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும், அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் வைத்தனர்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிரமம், ரயில் நிலையத்துக்கு செல்வோருக்கு சிரமம், போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது என்பதால் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படாததால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சிலர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர், அவரது உடலை பெற்று ஆம்புலன்ஸில் ஏற்றினர். ஆனால், அவரது உடலை ஊர்வலமாக கொண்டு செல்வோம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து இடையூறுகளை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனால், ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை மீண்டும் கீழே இறக்கி வைத்தனர். அவரது ஆதரவாளர்கள். தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை… அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்