சென்னை:
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவனை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். ஞானசேகரன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையே, ஞானசேகரன் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பள்ளிக்கரணையில் நடந்த 7 திருட்டு வழக்கு தொடர்பாக ஞானசேகரனை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 2022-24 வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள பெரிய வீடுகளில் காரில் சென்று திருட்டில் ஈடுபட்டதாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்தார்.முதற்கட்டமாக பள்ளிக்கரணையில் 7 வீடுகளில் திருடியதை ஞானசேகரன் ஒப்புக் கொண்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings