- நூற்றாண்டு கால பழமை வாய்ந்த பள்ளிவாசலில் சமுதாய நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி!!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் பெரிய பள்ளிவாசல் நூற்றாண்டுகளுக்கு மேல் இன்று வரை பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்தப் பள்ளிவாசலில் சமுதாய நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மேல் பள்ளிவாசல் முஸ்தி இமாம் சிறப்பு தொழுகை நடைபெற்றது.நீலகிரி மாவட்ட தலைமை ஹாஜி வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம் ராஜு கலந்து கொண்டு பேசுகையில்:- நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இந்தப் பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு நான் பெருமை அடைகிறேன், ஜாதி மத பேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வகையில் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சிறுபான்மை பிரிவு மக்களுக்காக தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அவரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் போஜன், துணைச் செயலாளர் லட்சுமி, நகர செயலாளர் ராமசாமி, மாநில விளையாட்டு அணி துணைச் செயலாளர் பா.மு.வாசிம் ராஜா,மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான்,தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் காளிதாஸ், செல்வம்,தலைமை கழக பேச்சாளர் ஜாகிர் உசேன்,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விவேகானந்தன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் வினோத்குமார்,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்,மற்றும் மாவட்ட பொறியாளர் துணை அமைப்பாளர் சந்தீப், இலக்கிய அணி மகாலிங்கம்,நகர மன்ற உறுப்பினர் ராஜேந்திரன், விளையாட்டு அணி தனசக்தி,கோபாலபுரம் கிளை சொயலாளர் செபாஸ்டின் அமல்ராஜ், ஜெகதளா பேரூராட்சி மன்ற உறுப்பினர் யேசோதா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும்,அனைத்து மதத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை குன்னூர் CTN பாரூக் மற்றும் சமுதாய நல்லிணக்க கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings