புதுடெல்லி:
பொதுமக்கள் தங்கள் ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஆதாரில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்வற்றை பதுப்பித்துக் கொள்ள அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதாரை புதுப்பிக்க வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையத்தை அணுகலாம்.
இவை இன்றி மை ஆதார் என்கிற இணையதளத்திலும் ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம். ஆன்லைன் மூலம் புதுப்பிக்க கட்டணம் கிடையாது. நேரில் புதுப்பிக்க ரூ.50 வசூலிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் 2023 டிசம்பர் 23 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பணி மந்தமாக நடைபெற்று வருவதால் தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது 2024 மார்ச் 13, ஜூன் 14 என அடுத்தடுத்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது.
இந்தநிலையில் வருகிற செப்டம்பர் 14ம் தேதி வரை 3 மாதங்களுக்கு ஆதாரை புதுப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேதி வரை கட்டணம் இன்றி ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings