நீலகிரி:
இதமான காலநிலையால் பசுமையாக மாறிய குன்னூர் பள்ளத்தாக்கு நிறைந்த காடுகள்… காற்றில் வீசும் பழுத்த பலா பழங்களை தேடி படையெடுத்து வரும் யானை கூட்டம். குட்டி யானை பலா பழத்தை கால்களில் உடைத்து ருசிக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது.யானை கூட்டத்தின் வருகையால் காடுகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி அடர்ந்த வனப்பகுதி நிறைந்த பள்ளத்தாக்குகளை கொண்டது. கண்களுக்கு தெரிந்த தூரம் வரை பச்சை பசேல் என்று பிரம்மாண்டமாக காட்சியளித்து வருகிறது. நீர் வீழ்ச்சிகள் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளும் மனிதர்களை தவிர்த்து வாழும் இருவாச்சி உள்ளிட்ட பறவை இனங்களும் அதிகளவில் வசித்து வருகின்றன.
கால நிலைக்கு ஏற்ப காடுகளில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். அதே போல் மா, பலா உள்ளிட்ட மரங்களும் ஏராளம் உள்ளன. தற்போது பலா மரங்களில் பழங்கள் காய்த்துள்ளது. விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவளிக்க மரங்களில் பலா பழங்கள் நன்கு பழுத்துள்ளது.
பழுத்த பழங்களின் வாசனை காற்றில் வீசுவதால் யானைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் யானை கூட்டம் தற்போது குன்னூர் பள்ளத்தாக்கை நோக்கி படையெடுத்து வருகின்றன. குட்டி யானைகளுக்கு தாய் யானை பழத்தை பறித்து கொடுத்து அதனை உண்ணுவதை கற்பிக்கிறது.
யானை கூட்டத்தின் வருகையால் காடுகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கூட்டத்தில் பெண் யானை ஒன்று கர்ப்பமாக உள்ளதால் வனத்துறையினர் அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பலா பழங்களை குட்டி யானை கால்களில் உடைத்து ரசித்தும் ருசித்தும் உண்ணும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
காடுகளில் யானை கூட்டம் சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் சாலையை கடப்பதால் வனத்துறையினர் வாகனங்களை நிறுத்தி யானை கூட்டத்தினை பாதுகாப்பாக சாலையை கடக்க வைக்கின்றனர்.
…
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings