சென்னை:
சமூக ஆர்வலரும், செய்தியாளருமான ஆர்.ஜேம்ஸ் பால் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில், ஒருவர் குற்றம் செய்துவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையும், பாதுகாப்பும் வழங்குகிறது. தமிழ்நாடு காவல்துறை தலைவர் எப்.வி.அருள் காலத்தில் காவல்துறையினர் சங்கம் அமைக்க கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ராஜகோபாலச்சாரியிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அவரது முன்னிலையில் கோகுலே ஹாலில் காவல்துறையினர் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது ராணுவத்தினரை வரவழைத்து போலீசார் மீது லத்தி சார்ஜ் நடத்தப்பட்டது. இதையடுத்து தங்களுக்கு சங்கம் தேவையில்லை என்பதை போலீசார் உணர்ந்தனர். இதுதொடர்பாக மன்னிப்பும் கேட்டனர். காவல்துறை சங்கம் அமைக்கக்கூடாது என்பதை உணர்ந்தனர்.
ஆனால் இப்போது சவுக்கு சங்கர் விஷயத்தில் உண்மைக்கு புறம்பான செயல் நடந்துள்ளது. பெண் போலீசார் குறித்து அவர் சர்ச்சைக்குறிய கருத்தை கூறிய விவகாரத்தில் அவர் மீது நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு எந்தவித அனுமதியும் கிடையாது. காவல்துறையின் அத்துமீறல்களை காணும் போது நாம் குல்ப் நாட்டில் வசிக்கிறோமோ என்கிற சந்தேகம் எழுகிறது.
ஆனால் காவல்துறை சட்டத்தை தனது கையில் எடுத்து சவுக்கு சங்கரை அடித்து கை மற்றும் கால்களில் காயப்படுத்தியுள்ளது. இது கண்டிக்க தக்க விஷயமாகும். அனைத்து காவல் நிலையங்களிலும் கண்டிப்பாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பொருத்தப்படாவிட்டால் சம்மந்தப்பட்ட காவல் நிலையம் மீது 166ஏ ஐபிசி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.
சட்டத்தை கையில் எடுத்து சவுக்கு சங்கரை தாக்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பொதுமக்கள் சார்பாக அரசாங்கத்திற்கு எழுப்பும் முழக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings