சென்னை:
பிரதமர் மோடியின் பயோபிக்ஸ் படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார்.
பல ஆண்டுகளாக சினிமா துரையில் கொடிகட்டி பறப்பவர் நடிகர் சத்யராஜ். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று அந்த கதாபாத்திரமாகவே மாறி நேர்த்தியாக நடித்து கொடுக்கக்கூடியவர் சத்யராஜ்.
அவர் நடித்துள்ள பாகுபலி படத்தில் அவர் ஏற்று நடித்த கட்டப்பா மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. தந்தையாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் அசத்தியுள்ளவர் நடிகர் சத்யராஜ்.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்ஸ் படமாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் நடிகர் சத்யராஜ் மோடி வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தாண்டு படப்பிடிப்பு பணி தொடங்கும் என்றும்,படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், இதர நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings