புதுடெல்லி:
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை கொண்டு வந்தது. சவுத் குரூப் என்ற நிறுவனத்திடம் மதுபான கடைகள் அமைக்க உரிமம் வழங்க ஆம் ஆத்மிகட்சி முக்கிய நிர்வாகிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சிபிஐ தனது தீவிர விசாரணையை தொடங்கியது. இதில் சவுத் குரூப் நிறுவனம் ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிபிஐ, அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில் சவுத் குரூப் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியும் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர வாவின் மகளும் எம்எல்ஏவுமாக கவிதா மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரை கடந்த மார்ச் 15ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கவிதா டெலலி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட் மறுப்பு தெரிவித்தது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings