சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உருவச்சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் ஏராளமான அதிமுக வினர் பங்கேற்ற நிலையில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. செங்கோட்டையன் கோபியில் உள்ள தனது அலுவலகத்தில் ஜெ.படத்திற்கு மரியாதை செலுத்தி இருந்தார். சென்னையில் கடந்தாண்டு நடைபெற்ற ஜெ.பிறந்தநாள் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings