நாகை:
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி நிறுத்தப்பட்டது. மீண்டும் கப்பல் போக்குவரத்து ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் எனக் கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் நீடித்து வந்ததால் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நாகை மற்றும் இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து பிப். 22-ம் தேதி (நேற்று) மீண்டு 3 மாதங்களுக்குப் பிறகு இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை நேற்று தொடங்கியது.
காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்திலிருந்து சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல், 83 பயணிகளுடன் காங்கேசன் துறைக்குப் புறப்பட்டுச் சென்றது. பகல் 12 மணிக்கு இலங்கையை அடையும் கப்பல், மீண்டும் அங்கிருந்து மதியம் 2 மணிக்குப் புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகைக்கு வரும். நாகை-இலங்கை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் கப்பல் போக்குவரத்து நடைபெறும். பயணிகள் www.sailsubham.com என்ற இணையதளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். 10 கிலோ எடையுள்ள உடைமைகளைப் பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம். கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்லக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings