வேலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்நத கலாவதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வேலூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் சிவகுமாரை சிறைத்துறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படி தனது மகனை பயன்படுத்தும்போது காவல் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் மதிப்பில் நகை, பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டி கடுமையாக தாக்கியுள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சிபிசிஐடி நடத்திய விசாரணையில் கைதிகளை தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் உள்பட 14 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings