குன்னுார் பாய்ஸ்கம்பெனி துாய ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது
குன்னுார் அருகேயுள்ள பாய்ஸ் கம்பெனியில் தூய ஆராேக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அன்னையின் பிறந்த நாள் பெருவிழா கொண்டாடப்படுகிறது.
கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் 42வது ஆண்டு பெருவிழா துவங்கியது. தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி, ஜெபம் ஆகியவை நடைபெற்றன.
திருவிழா தினமான இன்று ஊட்டி மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் மற்றும் குன்னூர் மறைமாவட்ட முதன்மை குரு.அந்தோணிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டு திருப்பலி,மறையுரை ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர் பவனியில் தூய ஆரோக்கிய அன்னை பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியான கேட்டில் பவுண்ட், அருவங்காடு,வழியாக பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.
இதில் வெளி மாநில சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் பங்கு தந்தை ஆல்பர்ட் செல்வராஜ் தலைமையில் இறையாசியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இரவு 8 மணிக்கு நற்கருணை ஆசிருடன் கொடியிறக்கம் நடைபெற்றது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings