ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா, A.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சொந்தமாக செங்கல் சூளை அமைத்து தொழில் நடத்தி வருகிறார்.
இவரது தந்தை அங்குச்சாமி பெயரில் மூன்றாம் நிலை ஒப்பந்ததாரராக பதிவு செய்ய வேண்டி கமுதி வட்டாச்சியர் அலுவலகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனு கொடுத்துள்ளார். பின்பு அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை 11.07.2024 ஆம் தேதி கமுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கட்டியுள்ளார்.
மேலும் இதுசம்மந்தமாக பலமுறை அலுவலகம் சென்று மேலாளர் ராமசந்திரனிடம் நேரில் கேட்ட போது சான்றிதழ் சம்மந்தமாக தீர்மானம் போடப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே தங்களிடம் கூறியது போல ரூ.20 ஆயிரம் எனக்கும், அலுவலகச் செலவிற்கும் கொடுத்துவிட்டு வாங்கிகொள்ளுங்கள் எனக் கராராக கூறினார்.
அதற்கு செந்தில்குமார் அரசுக்கு கட்ட வேண்டிய தொகையை கட்டிவிட்டேன். பிறகு எதற்கு நான் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என கேட்டதற்கு ரூ.12 ஆயிரம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் வேலை நடக்காது என்று தெரிவித்துள்ளார்.
பணத்தை உடனடியாக கொடுத்தால் இன்னைக்கே வேலையை முடித்து சான்றிதழ் பெற்று தந்து விடுவதாகவும், இல்லையென்றால் சான்றிதழ் கிடைக்காது எனவும் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு
போலிசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலிசார், அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.12, ஆயிரம் லஞ்சமாக வாங்கிய மேலாளர் ராமசந்திரனை லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings