நீலகிரி:
குன்னூர் அருகே வனத்திற்குள் செல்ல மறுக்கும் காட்டு யானைகள் இரண்டாவது நாளாக விரட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலகம்பை, தூதூர் மட்டம் , கிரேக் மோர் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு வந்த ஐந்து காட்டு யானைகள் இங்குள்ள ரேஷன் கடைகள் மற்றும் மளிகை கடைகளை சூறையாடியது .
இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் . இங்கு முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வன ஊழியர்கள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தாலும் வனத்திற்கு செல்ல மறுத்து மீண்டும் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிகிறது .
குன்னூர் ,குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட வன ஊழியர்கள் குழுவினர் நான்கு பிரிவாக பிரிந்து காட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர் .
வனத்தை விட்டு வெளியேறி முப்பது மணி நேரத்திற்கு மேலாக காட்டு யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன் வனத்துறையினருக்கும் போக்கு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது .
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings