புதுடெல்லி
இந்தியாவில் பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை இருக்கும். வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் இந்த பருவ மழை வடக்கு நோக்கி நகரும். தொடர்ந்து ஜூலை இரண்டாவது வாரத்தில் நாடு முழுக்க பருவமழையைக் கொடுக்கும்.
இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இன்று தொடங்கியுள்ளது. ஆனால் வழக்கமாக ஜூலை 8ம் தேதி தான் தொடங்கும்.
முன்னதாக கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மே 30ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இது வழக்கத்தைவிட 6 நாள் முன்னதாக தொடங்கியுள்ளது.
மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை தொடங்க தாமதமானது.
இதற்கிடையே ஜூன் 11 முதல் ஜூன் 27 வரை நாடு முழுவதும் பரவலாக வழக்கத்தைவிட குறைவாக மழை பொழிவே காணப்பட்டது. ஜூன் மாதத்தில் இயல்வு மழை அளவு 165ஆக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு 147 மி.மீட்டர்தான் மழைப் பொழிவு இருந்தது. ஆனால் ஜூலை மாதம் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings