ஐதராபாத்:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வருகிற மே மாதம் 7-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 4 வாரங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
நாட்டில் 3-வது முறையாக தெலங்கானாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளில் உலகம் முழுவதும் 140 நாடுகளைச் சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்க உள்ளனர்.
தற்போது உலக அழகி போட்டி நடைபெற உள்ளதால் உலக அளவில் தெலங்கானா, ஐதராபாத் பெருநகர பகுதி பிரபலமாகும். தெலங்கானா சுற்றுலாத் துறையுடன் இணைந்து இந்த போட்டிகளை மிஸ் வேர்ல்ட் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
தொடக்கம் மற்றும் நிறைவு விழா போட்டிகள் ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள போட்டிகள் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான இடங்கள் தேர்வு நடந்து வருகிறது.
GIPHY App Key not set. Please check settings