திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கருகப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு அறையில் சோதனை செய்தபோது கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த அறையில் வரபுழாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி அல்கா போனி (வயது22), இடுக்கியை சேர்ந்த ஆஷிக் அன்சாரி (22), சூரஜ் (26), பாலக்கோட்டை சேர்ந்த ரஞ்ஜித் (24), முகமது அசார் (18), திருச்சூரை சேர்ந்த அதுல் (18) ஆகிய 6 பேர் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. போதையில் இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் பெங்களூருவில் இருந்து போதை பொருட்களை கொண்டுவந்து கேரளாவில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களது செல்போன் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்த போதை பொருட்கள் வியாபாரிகள் மற்றும் பல்வேறு தகவல்களை போலீசார் சேகரித்தனர். மேலும் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் இவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings