in

விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் மரணம்: அமைச்சர் கூறுவது என்ன?

சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கண்டு ரசிக்க லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டனர். காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஏராளமானோர் குடையை பிடித்தபடி நின்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு முறையாக குடிநீர் வசதி எதுவும் செய்யப்படவில்லை. இதனால் வெளியின் தாக்கத்தில் மக்கள் மிகவும் தவித்தனர்.

இந்தநிலையில் விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென மயங்கி மயங்கி விழுந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நுங்கம்பாக்கத்தில் செய்தியார்களுக்கு அளித்த பேட்டியில், வான் சாகச நிகழ்ச்சியை காண 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்படவில்லை. வெயிலின் தாக்கத்தால் தான் 5 பேர் உயிரிழந்தனர்.

விமானப்படை கோரிக்கையின் அடிப்படையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை, கீழ்பாக்கம் என அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதி செய்யப்பட்டிருந்தது.

5 பேர் உயிரிழந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. இதனை வைத்து யாரும் அரசியல் செய்ய நினைக்க கூடாது. அப்படி நினைத்தால் தோல்விதான் அடைவார்கள்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 43 பேர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்டார். 2 பேர் உள்நோயாளிகளாக உள்ளனர். ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 49 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உள் நோயாளியாக சிகிச்சையில் உள்ளார். 

2 பேர் இறந்தவர்கள். ராயப்பேட்டை மருத்துவமனையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் உள் நோயாளியாக உள்ளார். 2 பேர் இறந்த நிலையில் அனுமதிக்கப்பட்டவர்கள். ஆக மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

​​குன்னூர் உஞ்சலார் கொம்பை பகுதியில் காவல் துறை சார்பில் ஆய்வு.

விமான சாகசம்: மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்