சென்னை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்துறை செயலாளர் அமுதா வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த வி.ராஜாராமன் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக பள்ளி கல்வித்துறை செயலாளராக இருந்த ஜெ.குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர். ராதாகிருஷ்ணன் உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிட்கோ மேலாண் இயக்குனராக இருந்த எஸ்.மதுமதி, பள்ளி கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுறவுத்துறை சங்கங்களின் கூடுதல் பதிவாளராக இருந்த டாக்டர் ஜெ.விஜயா ராணி, இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவு நுகர்வோர் பாதுகாப்பு மற்றம் கூட்டுறவுத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளராக இருந்த டாக்டர் கே.கோபால் கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகராட்சி ஆணையராக டாக்டர் நார்ணவாரே மணீஷ் சங்கர்ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலசந்தர் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளராக (ஆணையர்) பொறுப்பு வகித்த ஹர் சஹாய்மீனா சிறப்பு புத்தாக்கத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளராக வீர ராகவராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் முதன்மை செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
கலால் துறை கூடுதல் முதன்மைச் செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலாளராக எஸ்.சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை துணைச் செயலாளராக சி.ஏ.ரிஷப் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுத்துறை துணை செயலாளராக பி.விஷ்ணு சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நலத்துறை, மகளிர் மேம்பாட்டுத்துறை இணை செயலாளராக எஸ்.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதி நிர்வாகத்தின் மேலாண் இயக்குனராகவும் பொறுப்பு வகிப்பார்.
கலால் துறை இணை செயலாளராக ஜெ.ஆனி மேரி சுவர்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளராக ஷ்ரவன் குமார் ஜதாவத் நியமிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings