புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் கொரபுட் மாவட்டம் காசிபூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது தோழிகளுடன் அருகே உள்ள கிராமத்தில் தெருக்கூத்து நிகழ்ச்சி பார்க்கச் சென்றுள்ளார். இரவு நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது அந்த சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, அந்த சிறுமியைப் பின்தொடர்ந்து வந்த 4 இளைஞர்கள், சிறுமியைக் கடத்தினர். பின்னர், அருகில் உள்ள மலைப்பகுதிக்குச் சிறுமியைக் கடத்திச்சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அந்த கும்பலிடமிருந்து தப்பிய பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
GIPHY App Key not set. Please check settings