in

பரதவ குல மாமன்னன் பாண்டியாபதி தேர்மாறன் புகழ் நிலைக்க நினைவிடம் கட்டுக!

தலையங்கம்

மீனவர் தலைவர் தோழர் அன்டன் கோம்ஸ், பரதவ குல மாமன்னனுக்கு நினைவிடம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அன்டன் கோம்ஸ் தனது அறிக்கையில், ‘தேசத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுச் சான்றை அழிக்கும், மறைக்கும் செயலில் ஈடுபடும் தூத்துக்குடி லசால் பள்ளி நிர்வாகத்தின் அவசிய சுய சிந்தனைக்கு’ எனத் தொடங்குகிறார்.
‘விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பின் சிறப்பான சான்றை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசின் அவசர நடவடிக்கைக்கு’ என்பதாக தொடர்கிறார்.
வெள்ளையரால், கிறிஸ்தவ மதம் இந்தியாவில் திணிக்கப்பட்டதாகப் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளும் மதவாத அரசியலுக்கு, கத்தோலிக்க திருமறையின், இயேசு பெருமானின் சீடரான புனித. தோமையார் காலம் முதலான 2000 ஆண்டு கால (ஐரோப்பிய நாடுகளுக்கு முற்பட்ட காலம்) வரலாற்றில், சிறப்பான ஓர் அங்கமான தூத்துக்குடி புனித பனிமய அன்னையின் ஆலயம், தங்கத்தேரின் பல நூற்றாண்டு வரலாற்றை  பறைசாற்ற வேண்டிய தூத்துக்குடி மறைமாவட்டத்தின் கடமையான, இன்றைய காலத்தின் அத்தியாவசிய தேவையான மறை பணிக்கு’ என நீள்கிறது அவரது அறிக்கை.
பரதவ சமுதாயத்தின் மேன்மை மிகு வரலாறுகள் பல மறைக்கப்பட்ட நிலையில் சமுதாயத்தின் பங்களிப்போடு வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட மாவீரர்களுக்கு உதவி, இறுதி மூச்சுவரை வெற்றி வீரனாய் போரிட்டு, உடல் நலக்குறைவால் மரித்த ‘பரத குல மன்னன் பாண்டியாபதி’யின் நினைவிடத்தை சிதைக்கும் சதியை முறியடிக்க, ஒன்றுபட்டு தீவிர போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து பரத சமுதாய அமைப்புகளின், தூத்துக்குடி மண்ணின் மைந்தர்களான அனைத்து சமுதாய நல்லுள்ளங்களின் கவனத்திற்கும் எனது பணிவான வேண்டுகோள் என்கிறார் அவர்.
‘லசால் பள்ளி கடந்த காலங்களில் சிறப்பான கல்வி சேவை புரிந்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம். அங்கு நிர்வாகிகளாக இருந்தவர்கள் (Brothers) பல ஏழை மாணவர்களுக்கு உதவியவர்கள். அவர்களில் 1970களில் இருந்த வணக்கத்திற்குரிய Brothers ஏசுதாசன், அருள்சாமி ஆகியோரை நான் அறிந்திருக்கிறேன்.
அந்தப்பள்ளி பரதவ மக்களின் வாழ்விடத்தில் பரதவ மக்களின் ஒத்துழைப்போடு இயங்குவதை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் மறைக்கப்பட்ட பரதவ வரலாறுகளில் ஒன்றான, மாமன்னன் பாண்டியாபதி தேர்மாறனின் பூர்வீக இடத்தில் லசால்  பள்ளி இருப்பதாகவும் நினைவிடம் லசால் பள்ளி மைதானத்தில் இருப்பது‌ம் அறியப்பட்டு ஆண்டுதோறும் மாவட்ட ஆட்சியரும் மக்களும் அவரது நினைவு நாளில் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

லசால் பள்ளி மறந்த கடமை:

தேர் மாறன் நினைவிடம் லசால் பள்ளிக்கு கிடைத்த அரிய சிறப்பு!  இந்த சிறப்பை உணர்ந்து, அவர்களே அரசுக்கு கோரிக்கை வைத்து தேர்மாறனுக்கு நினைவு மண்டபம் அமைக்க தேர்மாறன் வரலாற்றை பள்ளி பாடப்புத்தகங்களில் சேர்க்க வலியுறுத்தியிருக்க வேண்டும். அது லசால் பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாக, நாடு முழுவதும் லசால் பள்ளி சிறப்பாக அறியப்பட அரியதொரு வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக லசால் பள்ளி நிர்வாகம் அதைப்பற்றி சிந்திக்கவில்லை.

மத்திய, மாநில அரசுகளின் துரோகம்:

சுதந்திரப்போர் தியாகிகளான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன், வீரன் அழகுமுத்து கோன், தீரன் சின்னமலை என பல போராளிகளைப் போற்றும் மத்திய, மாநில அரசுகள், தேர் மாறன் நினைவிடம் அறியப்பட்டவுடன் அந்த இடத்தை கைப்பற்றி, நினைவு இல்லம் அமைத்திருக்க வேண்டும். ஆனால் மீனவ சமுதாயம் மீதான அனை த்து விஷயங்களிலும் அரசின் பாராமுகம் தேர் மாறனுக்கு நினைவிடம் அமைப்பதிலும் இருப் பதை புரிந்துகொள்ள முடிகிறது.

மறைமாவட்டம் சிந்திக்க தவறியது:

பரிசுத்த பனிமய அன்னையின் தங்கத் தேர் திருவிழா, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத வேறுபாடின்றி கலந்து கொள்ள மாநிலத்தின், தேசத்தின் பல்வேறு உலக நாடுகளில் வாழும் லட்சகணக்கான பரதவ குல மக்களின் பங்களிப் போடு நடைபெறுவதை அனைவரும் அறிவோம். அன்னையின் திருத்தேர் ஆலய வளாகத்தைவிட்டு வெளியே வரும்போது நேர் எதிரே அமைந்தி ருப்பது தேர் மாறனின் நினைவிடம். இது அன்னைக்கு தேர் வழங்கிய தேர் மாறனுக்கு கிடைத்த இறையருள். தேர்மாறனின் நினைவிடம் அடையாளம் காணப்பட்ட காலத்திற்கு பின் பரத குல மக்களின் பங்களிப்பில் பெரும் பொருட்செலவில் விழாவை நடத்தும் மறைமாவட்டம் தங்கத் தேரின் தொன்மை வரலாற்றை பறைசாற்ற நினைவிடத்தில் பள்ளி நிர்வாகத்தின் அனுமதியுடன் நினைவு இல்லம் அமைந்திருக்க வேண்டும். இதன் மூலம் அன்னையின் விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான இக்கால தலைமுறை தங்கத்தேரின், தேர் மாறனின் வரலாற்றை அறியும் வாய்ப்பு ஏற்ப்பட்டிருக்கும்.
அன்னையின் ஆலயத்தின் வரலாற்றுத் தொன்மையின் பகுதியான தங்கத் தேர், தேர் மாறனின் வரலாற்றை போற்ற வேண்டிய கடமையுள்ள மறைமாவட்டம் தேர் மாறனின் நினைவிடத்தை கண்டுகொள்ளாதது புரியாத புதிராகும்.

பரதகுல இயக்கங்களின் குரல்:

லசால் பள்ளி, தமிழக அரசு, மறைமாவட்டம் என எவரிடமிருந்தும் தேர் மாறன் நினைவிடம் தொடர்பாக முறையான நடவடிக்கை இல்லாத நிலையில் பரதகுல அமைப்புகள் லசால் பள்ளி நிர்வாகத்திடம், தேர்மாறன் கல்லறை உள்ள இடத்தில் ஒரு சிறு பகுதியில் தாங்களே நினைவிடம் அமைக்க அனுமதி கேட்டதாகவும் அதற்கு நிர்வாகம் தாங்கள் ஸ்டேடியம் கட்ட இருப்பதால் முடியாது என மறுத்ததாகவும் அறிகிறேன். இச்செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது பள்ளி நிர்வாகத்தின் அறி யாமையைக் காட்டுகிறது.
அறியாமையில் வரலாற்றை மறந்து, மறுத்து பேசும் நிர்வாகத் திடம் மறைமாவட்ட பிரதிநிதிகள் மற்றும் பரத குல அமைப்புகள் ஒன்றுபட்டு தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினால் தெளிவு, தீர்வு ஏற்படும் என நம்புகிறேன்.

அரசின் நடவடிக்கை:

தீர்வு கிடைக்காத பட்சத்தில், மாவட்ட ஆட்சியரை அணுகி அரசின் உத்தரவின் பேரில் தேசிய சுதந்திரப் போராட்ட வரலாற்று சான்றைக் காக்க, அதனை சிதைக்கத் துடிக்கும் நிர்வாகத்தை சட்ட நடவடிக்கை மூலம் தண்டிக்க, அப்பகுதியை அரசுடமையாக்கி நினைவிடம் அமைக்கக் கோர வேண்டும். அதற்காக பரதகுல போராட்ட குழு அமைத்து, ஒட்டு மொத்த தூத்துக்குடி அனைத்து சமுதாய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஆதரவோடு போராட்டக் களம் அமைக்க வேண்டும்.
மேலும் தொடர்ந்து மறுத்தால் அப்பள்ளியை ஒட்டு மொத்த சமுதாய மக்களும் புறக்கணித்து தங்கள் குழந்தைகளை எதிர்வரும் கல்வி ஆண்டு முதல் வேறு பள்ளிகளில் சேர்ப்பது தேசிய வரலாற்றை மறைக்கும் பள்ளியை அரசுடமையாக்கி மீனவர் பகுதியில் அரசு பள்ளிகள் இல்லை என்ற குறையை போக்கி அரசின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மாத்திரமான மருத்துவ இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல சலுகைகளை பெற செய்வது என கடந்த கால லசால் பள்ளியின் கல்வி சேவையை மறக்காமல் இன்றைய நிர்வாகத்தின் தவறான முடிவினால் கனத்த இதயத்தோடு முடிவு செய்து களம் அமைப்போம்.
தேவைப்பட்டால் போராட்ட களத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி அனைத்துத் மாவட்ட தலைநகர் களிலும் (கடலோரம் மற்றும் உள்நாடு) மற்றும் தலைநகரிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தி தமிழக முதல்வரை சந்திப்போம். தேசிய சுதந்திரப் போராட்ட வீரனின் வரலாற்று சான்றை சிதைக்கும் சதியை, டெல்லியில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் எடுத்துச் செல்ல அகில இந்திய மீனவர் சங்கம் சார்பாக உறுதியளிக்கிறேன்.
வருங்காலங்களில் பழைய துறைமுகத்துக்கு (தோணி துறைமுகம்) தேர்மாறன் பெயர் சூட்ட புதிய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் மீனவர் உரிமை, நலனில் உறுதியாக நிற்போம் என்றும் ‘அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய தலைவர்’ அன்டன் கோம்ஸ் அறிக்கை தந்துள்ளார். கடல்சார் பாரம்பரிய பழங் குடிகளான மீனவர்களின் இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்.

-தெ.சீ.சு.மணி

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

போலீசாரின் வாரிசுகள் 70 பேர் கல்விக்கு ரூ.10.78 லட்சம் நிதியுதவி