ஆவடி
ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீசில் மத்திய குற்ற பிரிவில் மாதவரம் சோழவரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் மு. தசரதன் (வயது 55). போலீஸ் கமிஷன் ஷங்கரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், தசரதன், 2001 ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை சோழவரம் அரசு ஆதிதிராவிட நல மாணவர் விடுதியில் சமையலராக பணி புரிந்து வந்தார். அதற்குப் பிறகு அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வடகரை செங்குன்றத்தில் இரவு காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.
தற்போது அதே பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். 1.3.2018ம் தேதி ராஜ் பாபு என்பவருடன் பழக்கமாகினார். அவர் தலைமைச் செயலகத்தில் அலுவலக பணி காலியாக உள்ளது. அந்தப் பணியின் சேர்த்து விடுகிறேன். உனக்குத் தெரிந்த நபர்கள் வேலையில்லாமல் இருந்தால் சொல். வேலை வாங்கித் தருகிறேன். 1.சத்துணவு அமைப்பாளராக 2. தலைமைச் செயலகத்தில் ஆபீஸ் அசிஸ்டன்ட் 3. மக்கள் செய்தி தொடர்பு துறை பிரிவுகளில் வேலை வாங்கி தருவதாக கூறினான்.
அவனிடம் இருந்த பணி நியமன ஆணையின் நகல்களை தசரதனிடம் காண்பித்துள்ளான். அதன் பேரில் ஒரு நபருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வீதம் 10 பேரிடம் ரூ. 25 லட்சம் வாங்கி ராஜ் பாபு என்பவனிடம் கொடுத்துள்ளார். அதனுடன் அனைவரின் கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வும் கொடுத்துள்ளார். பணம் வாங்கி கொடுத்த நபர்கள் தசரதனிடம் தொந்தரவு செய்ததால் ராஜ் பாபுவிடம் அழைத்துச் சென்று பணத்தைக் கேட்டுள்ளார்.
பணத்தை தருவதாக கூறி சிறிது சிறிதாக ரூ. 11 லட்சத்து 73 ஆயிரத்தை கொடுத்துள்ளார். மீதி பணத்தை தருவதாக கூறி ஏமாற்றி வந்தான். ஏமாற்றிய தொகை ரூ,13 லட்சத்து 27 ஆயிரம் ஆகும். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கொடுத்த புகாரின் மீது வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் ஆல்.பி,பிரிஜிட் மேரி விசாரணை மேற்கொண்டார்.
ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் மற்றும் காவல் துணை ஆணையர் பி.பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பெயரில் தலை மறைவாக இருந்த சென்னை செங்குன்றம் எம்.க.காந்தி தெரு நாரவாரி கும்பத்தை சேர்ந்த ராஜ் பாபுவை (வயது 52) கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings