திருப்பூர்:
திருப்பூரில் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த, பீஹார் மாநில இளைஞர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் கத்தி முனையில் மிரட்டி, கணவர் முன்பே, வட மாநில பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று வட மாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த பெண் அளித்த புகார் படி, பீஹார் மாநிலத்தை சேர்ந்த, நதீம், டானிஷ், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.