சென்னை:
72-வது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, நடிகர் ரஜினிகாந்த், கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று காலை முதல்வர் ஸ்டாலின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்தார். குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுகள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்றார். அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது. அவர் ”அண்ணா வழியில் அயராது உழைப்போம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.” என்று முழங்கத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தொண்டர்கள் அதனை வழிமொழிந்து கோஷம் எழுப்பினர்.
GIPHY App Key not set. Please check settings