in

தமிழகம் திரும்பிய 14 மீனவர்கள்!

சென்னை:

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி இரவு கட்சி தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர் அப்பொழுது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி 12 மீனவர்களையும் கைது செய்தனர் மேலும் டிசம்பர் 23-ம் தேதி அன்று கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை இலங்கை கடற்படையின எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து இருந்தனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்து மத்திய மாநில அரசுகளின் பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இலங்கை சிறையில் ஏற்கனவே இருந்த 2 பேர் உட்பட 14 மீனவர்களை விடுதலை செய்தனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 14 பேரையும். கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்தியத் தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின்பு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையம் வருவதற்காக அவசரக்கால கடவுச்சீட்டுகள் வழங்கி விமானத்தில் அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையம் வந்த 14 மீனவர்களைச் சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை சுங்க சோதனை என அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு வெளியே வந்து அவர்களை ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரிகள் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றுத் தனி வாகனம் மூலம் ராமேஸ்வரம் பகுதிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சிம்பொனி அரங்கேற்றம்: இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்