அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்ற வேளையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கோவையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கிற பெயரில் ஆலோசனை நடத்தினார். அப்போதுபேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சியில் இருந்த போது கோப்புகள் அனைத்தும் தன்னிடம் வந்துதான் செல்லும். அதில் பல தவறுகள் இருந்தன. அந்த ரகசியங்களை நான் அவிழ்த்து விட்டால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குத் தான் செல்ல வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளதால் அவர் தான் திகார் சிறைக்கு செல்வார் என்று பதிலடி கொடுத்தார். தன் மீது ஏதாவது பழியை சொல்லி தப்பிக்க பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
தன் மீது குற்றம் இருந்தால் அதை சொல்லட்டும். அப்படி ஏதாவது இருந்தால் திமுக தன்னை விட்டு விடுவார்களா எனவும் கேள்வி எழுப்பினார். பல வழக்குகளை ஓபிஎஸ் சந்தித்து கொண்டு இருப்பதால் அவர் தான் உள்ளே போவார் என்றார்.
அத்துடன், தூத்துக்குடியில் வக்கீல் ஓடை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 80 சதவீத பணிகள் நிறைவடைந்தன. எஞ்சிய பணிகளை திமுக அரசு முறையாக முடித்திருந்தால் அங்கு பெரிய அளவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Add Your Heading Text Here

ஓ.பன்னீர்செல்வம் திகார் சிறைக்கு செல்வார்: -எடப்பாடியார் காட்டம்