பெங்களூரு:
சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் வகையில் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம்ஆதித்யா எல்1 என்கிற அதிநவீன விண்கலத்தை வடிவமைத்து கடந்த செப்டம்பர் 2ம் தேதி சி57 ராக்கெட் மூலம் கடந்தாண்டு செப்டம்பர் 2ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
பூமியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்1 புள்ளியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும் அந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது.
ஏறத்தாழ 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்டு ஆதித்யா விண்கலம் எல்1 புள்ளியை இலக்கில் சரியாக நிலை நிறுத்தப்பட்டது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டனர். அடுத்த 5 ஆண்டுகளுக்க இந்த விண்கலம் சூரியனை ஆய்வு மேற்கொள்ள உள்ளது.